திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் “வேதி வினைகள்” எனும் தலைப்பில் பணிமனை (workshop) மற்றும் குழந்தைகளுக்கு “Still life painting” உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாவட்ட அறிவியல் மையம் அறிவித்துள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், சர்வதேச அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியக தினத்தை (International Science Centre & Science Museum Day) முன்னிட்டு வருகின்ற 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான “வேதி வினைகள்” என்ற தலைப்பில் பணிமனை (Workshop on ‘Chemical Reactions) ஒன்றை காலை 10.30 முதல் மாலை 04.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிமனையில் செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கான பயிற்சி கட்டணம் உண்டு. குறிப்பிட்ட இடங்களே அனுமதிக்கப்படுவதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் அனைவருக்கும் வழங்கப்படும். இதற்கான விண்ணப் படிவம் அறிவியல் மையத்தில் இலவசமாகப் பெற்றுக் கொண்டு 08.11.2024 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்கள் அறிய [email protected] என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94429 94797 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் தினத்தை ( Children’s Day) முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் வருகின்ற 14.11.2024 வியாழக்கிழமை அன்று 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக “Still life painting” என்ற பணிமனையும், இதில் பெறுபவர்கள் Oil Pastel கொண்டு வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் 3 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு என்னைக் கண்டறிக “Identify Me” என்ற போட்டியும் நடைபெறவுள்ளது. இதில் ஒரு பள்ளியிலிருந்து இருவர் பங்கேற்கலாம். இவ்விரண்டும் காலை 10.30 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும் நடைபெறவிருக்கிறது. இதற்காக நுழைவுக் கட்டணம் கிடையாது. பள்ளி மூலமாக முன்பதிவு செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.