நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அல்-அஸ்ஹர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 70-வது குடியரசு தின விழா..வீடியோ..

இந்தியாவின் 70-வது குடியரசு தினவிழா நெல்லை மாவட்டம் கடையநல்லூர்  அல் – அஸ்ஹர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26.01.2019 இன்று காலை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவிற்கு பள்ளியின் தாளாளர் காதிர் அலி தலைமை தாங்கினார். Dr. Prof. M.E.D. MOHAMED (Organizer, Muslim Law Academy) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் மேலாளர் திப்பு சுல்தான் மற்றும் பள்ளியின் முதல்வர் ருக்கையா முன்னிலை வகித்தார்கள்.

அல்-அஸ்ஹர் டிரஸ்ட் உறுப்பினர்கள் முஹம்மது கனி மற்றும் சாகுல் ஹமீது மேலும் பள்ளியின் அலுவலக ஊழியர் நைனா முஹம்மது (எ) கனி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பள்ளி மாணவ மாணவிகளின் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தின வாழ்த்துக்களை தங்களிடையே பறிமாற்றிக் கொண்டனர்.

விழாவின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!