திருநெல்வேலி சரகத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 262 கிலோ கஞ்சா பொருட்கள் திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வைத்து காவல் துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டன. திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் பொருட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்திருந்தன.



இந்நிலையில், திருநெல்வேலி சரக காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி தலைமையில், காவல் துறை சரக போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சிலம்பரசன், நாங்கு நேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், தூத்துக்குடி மாவட்ட மது விலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் அருள், தென்காசி மாவட்ட மது விலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமார், திருநெல்வேலி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரன் மற்றும் திருநெல்வேலி தடயவியல் நிபுணர் மினிதா (பொறுப்பு) ஆகியோரின் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் காவல் நிலையச் சரகத்திற்கு உட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.