திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதி மொழி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஏற்கப்பட்டது. இதில் காவல் துறையினர் அனைவரும் பின்வரும் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப் பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப் பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,
சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று காவலர்கள் அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.