நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.
விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தலைமையில் நெல்லை மாநகராட்சி மேயர் இராம கிருஷ்ணன் சிறப்பு இலச்சினையை (லோகோ) வெளியிட்டார். நிகழ்வில் பொதிகைத் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் பா. இராம கிருஷ்ணன் உடன் இருந்தார்.
பொதிகைத் தமிழ்ச் சங்க 10-வது ஆண்டு தொடக்க விழா தொடர்பாக கவிஞர் பேரா கூறியதாவது, “தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொதிகைத் தமிழ்ச் சங்கம் பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதற்காக நடத்தப்பட உள்ள விழாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தச் சங்கத்தின் செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது. உலகத்தில் இருக்கின்ற பல தமிழ்ச் சங்கங்களின் வாழ்த்துக்களோடு இந்த மலர் வெளியாக உள்ளது.
இந்த விழாவிற்காக சிறப்பு இலச்சினை (லோகோ) ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த இலச்சினையை (லோகோவை) நெல்லை மாநகராட்சி மேயர் பா. இராம கிருஷ்ணன் வெளியிட்டார். மார்ச் மாதம் 7-ஆம் தேதி நடக்க இருக்கும் ஆண்டு இந்த விழாவில் மகாகவியைப் போற்றும் விதமாக “மகாகவியின் மாதவம்” என்கின்ற தலைப்பில் மாபெரும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு அறிஞர்கள் உட்பட பல தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்” இவ்வாறு கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.