நெல்லையில் மகளிர் தின போட்டிகள்; காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தகவல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின சிறப்பு போட்டிகள்; காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தகவல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மகளிர் தின சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளதாக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார். இது பற்றிய அருங்காட்சியக செய்திக் குறிப்பில், அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி, NPNK – நல்லதைப் பகிர்வது நம் கடமை கலைப் பண்பாட்டு மன்றம், ஸ்டார் கோச்சிங் சென்டர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மற்றும் மகளிர் தின கொண்டாட்டக் கலைப் போட்டிகள் வரும் மார்ச் 03-2024 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வைத்து நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்பாளர்கள் மாலை 3:30 மணிக்குள் தங்களது பெயர்களை அருங்காட்சியகத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.

நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். அதன் விபரம் வருமாறு,

1. ஒரு நிமிட நட்சத்திரம் : ஒரு நிமிடத்திற்குள் நடனம் ஆடலாம் அல்லது பாட்டு பாடலாம் அல்லது தனி நடிப்பை வெளிப்படுத்தலாம்.

2. பசுமை சமையல் : அடுப்பில்லா முறையில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆரோக்கிய உணவை வீட்டிலேயே தயாரித்து கொண்டு வந்து காட்சிக்கு வைக்க வேண்டும்.

3. “மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு : 1 நிமிட பேச்சு போட்டி.

4. கையிலே கலை வண்ணம் கண்டோம் : வீட்டிலேயே தயாரித்த கழிவு பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து காட்சிக்கு வைக்கலாம். உணவு மற்றும் கலை பொருட்கள் ஆகியவற்றில் கலைஞர் நூற்றாண்டு தொடர்புள்ள கருப்பொருளில் காட்சிக்கு வைக்கலாம்.

மேற்கண்ட போட்டிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை 9486978527 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்துள்ளார் .

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!