திருநெல்வேலி கோர்ட் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கோர்ட் வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், ‘பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் என்ன செய்கிறது?’ என, சரமாரியாக கேள்வி எழுப்பியது. கோர்ட் முன்பு, பட்டப்பகலில் கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கோர்ட்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் பிஸ்டல் துப்பாக்கியுடன் எஸ்.ஐ. மற்றும் துப்பாக்கிகளுடன் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவு அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு போலீசாருக்கு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
You must be logged in to post a comment.