நெல்லையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் சார்பாக பாளை மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கி மே தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பாளை பகுதி மஜக செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அலிஃப் A..பிலால் ராஜா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மே தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பாளை மண்டல செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்