நெல்லையில் “ஓரணியில் தமிழ்நாடு” பிரச்சாரம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படுத்தி வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பிரச்சார பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






அந்த வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சி மற்றும் திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், மைதீன் கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா, நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோருடன் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.
பாசிசத்திலிருந்து தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்போம் என்பதை அடிப்படையாக கொண்ட “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திமுகவின் முன்னெடுப்பு பொதுமக்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. பலர் தங்களை இணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.