காவலர்கள் தங்களின் உடல் நலனை நல்ல முறையில் பேணி காக்க வேண்டும் என நெல்லை மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை பகுதியிலும், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே தேவி மஹாலிலும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, சீஷா தொண்டு நிறுவனம் மற்றும் திருநெல்வேலி கருண்யா மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் ஜன.20 அன்று மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் முன்னிலையில் நடைபெற்றது.




திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், காவல்துறையினர் அனைவரும் தங்கள் உடல் நலனை நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டும் எனவும், ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொண்டு உடலைப் பேணிக் காக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், சேரன்மகாதேவி உட்கோட்ட காவலர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், உடல் பரிசோதனை இரத்த சர்க்கரை அளவு, கண் பார்வை பரிசோதனை, பல் மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்த பரிசோதனை, எலும்பு தாது அடர்த்தி, ஹீமோகுளோபின் அளவு, ஆக்சிஜன் அளவு, இதய பரிசோதனை போன்றவை நடத்தப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









