சுய உதவி குழுக்களுக்கு சிறந்த சேவையாற்றிய வங்கிகளுக்கு விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கல்..

நெல்லையில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2022-23-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் வழங்கினார். 2022-23 ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய சிறந்த வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 01.03.2024 அன்று நெல்லையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட அளவில் சிறந்த சேவையாற்றிய திருநெல்வேலி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கேடயமும், மாவட்ட அளவில் சிறந்த சேவையாற்றிய வங்கி கிளையான இந்தியன் வங்கி (மைக்ரோசெட்) முதல் பரிசாக ரூ.15000 மற்றும் கேடயமும், திருநெல்வேலி ஜங்சன் ஐசிஐசிஐ வங்கி இரண்டாம் பரிசாக ரூ.10,000 மற்றும் கேடயமும், மானூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!