நெல்லை மாவட்டத்தில் ஒரே முகவரியில் உள்ள மின் இணைப்புகளை இணைக்கும் பணிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தில் மின்வாரியம் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ள வீடுகளில் மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் ஏழை மக்கள் கடும் மின் கட்டண உயர்வுக்கு உள்ளாகி வருகின்றனர். மாநில மின்வாரிய தலைமை இடத்தில் இருந்து எவ்வித உத்தரவும் வராத நிலையில் வாய்மொழி உத்தரவுக்கு இணங்க இந்த இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் வீட்டுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதை மறைமுகமாக தடுக்கும் வகையில் இப்பணிகள் உள்ளது. எனவே இப்பணியை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மண்டல இளைஞர் அணி செயலாளர் அஷ்ரப், நெல்லை மாவட்ட துணை செயலாளர் 50 வார்டு முகமது இஸ்மாயில், மேலப்பாளையம் பகுதி செயலாளர் காஜா நிஜாம், துணைச் செயலாளர் ஷேக் சையத், துணைச் செயலாளர் டவுண் காஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.