நெல்லையில் பயணியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், இன்று காலை 8.30 மணிக்கு பயணி ஒருவர் லக்கேஜ் உடன் ஏற வந்துள்ளார்.
அப்போது அரசு பேருந்தின் நடத்துனர் அந்த பயணியை ஏறக்கூடாது என்றும், உனது டிக்கெட் வேண்டாம் என்றும், ஆபாச வார்த்தை பேசி பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சி வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த காட்சியை தொடர்ந்து பேருந்தில் ஏற முயன்ற பயணியை, தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் சேதுராமலிங்கம் (52 ) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் பிறப்பித்தார். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.