நெல்லையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பள்ளி குழந்தைகளை நெல்லை சரக டிஐஜி பா.மூர்த்தி பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார். நெல்லை செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் வகுப்பில் மாணவர் சபரி இஷாந்த் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். இரண்டாவது வகுப்பில் மாணவர் ரியோ மார்வினும், மூன்றாவது வகுப்பில் மாணவி மீரஜாவும், நான்காவது வகுப்பில் மாணவி பிளெஸ்ஸியும், ஐந்தாவது வகுப்பில் மாணவி ரெனிஷாவும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
அதைப்போல இரண்டாவது மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் விடுமுறை எடுக்காமல் அதிக நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அழகான, சிறப்பான கையெழுத்துடைய மாணவ, மாணவியருக்கும் பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. அனைத்து மாணவ, மாணவியருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விழாவில், நெல்லை சரக டிஐஜி முனைவர் பா.மூர்த்தி ஐபிஎஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார். மாணவர்கள் சிறப்பான கல்வி பெற அறிவுரைகளை வழங்கி, வாழ்த்துக்கள் கூறினார். மேலும் பசுமையை காக்கும் விதமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பேணிப் பாதுகாத்து வளர்க்கவும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் பள்ளி முதல்வர் சந்தனமேரி மற்றும் வரம் அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் நாகராஜன் மற்றும் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை ரதி மற்றும் பீமு ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.