நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் ஆன்லைன் சென்டர் நடத்தி வந்த இளைஞரை சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், சென்டருக்குள் புகுந்து மர்மநபர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்நிலையில், நெல்லை மேலப்பாளையத்தில் படுகொலை செய்யப்பட்ட செய்யது தாமீன் என்பவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரியும் இன்று (12.08.2024) மேலப்பாளையம் அனைத்து கட்சிகள் மற்றும் வியாபாரிகள், ஜமாத்துகள் சார்பில் கடையடைப்பு நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. அதனை ஏற்று நெல்லை மேலப்பாளையத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.