சமூகங்களிடயே நல்லிணக்கம் ஏற்படுத்துவோம்; பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தீர்மானம்..

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம் என பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள இருதயகுளத்தில் வைத்து, சமய உணர்வுகளின் பரிமாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இயேசுவின் புனித இருதய சகோதரர்கள் சபை, காசனல் சபை, இணைந்து, ஏற்பாடு செய்த (ஐ.ஏ.ஆர்.எஃப்) பன்னாட்டு மத சுதந்திர அமைப்பின், சமய உணர்வுகளின் பரிமாற்றம் கலந்துரையாடல் நிகழ்ச்சி, காசனல் சபை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்தியப் பிரிவின் முன்னாள் தலைவர் சுப்பிரமணிய ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய பொதுச் செயலாளர் பிரிட்டோ, மதங்களுக்கு இடையேயான கலந்துரையாடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காசனல் சபை அருட்சகோதரர் ஸ்டீபன் ஆரோக்கியசாமி தொடக்க உரை நிகழ்த்தினார். 

“அறிவொளி பெற்றவர்களைச் சந்திப்போம்” என்ற தலைப்பில், பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் நாராயணன், அருட்சகோதரர் செபாஸ்டியன், ஆசிரியர் மைதீன்பிச்சை, தலைமையாசிரியர் பெருமாள், கல்லிடைக்குறிச்சி ஜமாத் தலைவர் அப்துல் காஜிப், மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெபமணி ஆகியோர் பேசினர். வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் வெவ்வேறு தலைமுறையினர் இடையே புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தை, விளையாட்டு போட்டிகளை நடத்தினார். பன்னாட்டு மத சுதந்திர அமைப்பின் தென்காசி மாவட்ட தலைவராக கட்டி அப்துல் காதர் தேர்தெடுக்கப்பட்டார். அம்பை செயலாளர் செல்லச்சாமி நன்றி கூறினார். ஆசிரியர்கள் ஆரோக்கியம், பிரின்ஸ், அகஸ்டின், ஆரோக்கியராஜ், மேத்யூ, அருட்சகோதரர்கள் சைமன், இன்னாசி ஆசிரியைகள் ரோஸ்லின் மற்றும் சார்லஸ், ஜோசப், ராஜன், எட்வின் ஜெபராஜ், பொன்வேல், ஜான்ஸி, ஜேஎம்ஜே சகோதரிகள், சிஎஸ்சி சகோதரிகள், ஐசிஎம் சகோதரிகள் மேலும் பல்வேறு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியைகள், தாளாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!