நெல்லையில், 110/33-11KV மேலப்பாளையம் துணை மின் நிலையம், 33/11 KV புதிய பஸ் நிலையம் மற்றும் 33/11 KV ரொட்டியார்பட்டி உப மின் நிலையங்களில் 23.07.2024 (நாளை) மாதாந்திர பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் காலை 9.00 முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி) செ. முருகன் அறிவித்துள்ளார்.
மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர் புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், ஆஸ்பத்திரி ரோடு, தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுல வணிகபுரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பஷீர் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, PSN கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, என் ஜி ஓ காலனி, மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன் தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இப்பகுதிகளில் காலை 9.00 முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.