இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நெல்லையில் நடத்தப்பட வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நெல்லையில் நடத்தப்பட வேண்டும்; கவிஞர் பேரா வலியுறுத்தல்..

தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக பாளையங்கோட்டையில் நடந்த இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்வில் பேசிய கவிஞர் பே.இராஜேந்திரன் “தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியை இந்த ஆண்டு திருநெல்வேலியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்திப் பேசினார். தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் 100 கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கும் இளையோர் இலக்கியப் பாசறை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருங்கிணைப்பு அலுவலராக கவிஞர் நெல்லை ஜெயந்தா இப்பாசறை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கான இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உரையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் வரவேற்றுப் பேசினார். ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா நோக்கவுரையுடன் புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும் எனும் தலைப்பில் உரையாற்றினார். சாகித்ய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜி என்ற வண்ணதாசன் வாழ்த்துரை வழங்கினார். செம்மொழித் தமிழின் சிறப்பு ” எனும் தலைப்பில் பொதிகைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் கவிஞர். பே. இராஜேந்திரனும், மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும் எனும் தலைப்பில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவனும் நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ் எனும் தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் வ.ஹரிகரனும், அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும் எனும் தலைப்பில், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதனும், கண்களைத் திறந்த கதை உலகம் என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்வில் பேசிய கவிஞர் பே.இராஜேந்திரன் “தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் நடத்தி வரும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியை இந்த ஆண்டு திருநெல்வேலியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்திப் பேசினார். இந்நிகழ்வில், கேரளப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தனார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 18 கல்வி நிறுவனங்களிலிருந்து 100 மாணவ மாணவியர் பங்கேற்றனர். திருநெல்வேலி மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் சுந்தர் கலந்து கொண்டார். நெல்லை சு. பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கி நிறைவுரை ஆற்றினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!