நெல்லையில் இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை..

நெல்லையில் இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை..

நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் மணிகூண்டு அருகே இரவு நேரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகர மணிக்கூண்டு அருகே மே.17 இரவு இசக்கிமுத்து என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முதல் கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் வசவபுரத்தை சேர்ந்தவர். தற்போது அவர் திம்மராஜபுரத்தில் வசித்து வருகிறார். கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்துக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகிறது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பரபரப்பாக இயங்கும் மணிகூண்டு பகுதியில் இரவில் நடைபெற்ற இந்த கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!