இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விநியோகம் செய்யும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பாளை ஃபாரூக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா, மண்டல இளைஞர் அணி அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பால் சேக், இளைஞரணி பொருளாளர் அப்பாஸ் உள்ளிட்ட மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், மேலப்பாளையம் பகுதி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் 50 வார்டு ஹாமீம்புரம் 6,7-வது தெருவின் கழிவுநீர் வாறுகால்கள் சீர் செய்யப்பட வேண்டும், மேலப்பாளையம் மருத்துவமனை நிறுத்தம் துவங்கி சந்தை ரவுண்டானா வழியாக சேவியர் கல்லூரி, யோவான் கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியை இணைக்கும் வகையில் மாணக்கர்கள் பயன்பெறும் பொருட்டு புதிய பேருந்து வசதி வேண்டும், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்பவர்களை போக்குவரத்து காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும், தொடர்ச்சியாக இளைஞர்களை குறி வைத்து தடை செயப்பட்ட போதை பொருட்களை விநியோகிக்கும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலப்பாளையம் 50 வார்டு மாவட்ட துணை செயலாளர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.