வீரவநல்லூர் அருகே கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு…
வீரவநல்லூர் அருகே கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற நல்லதம்பி (52) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத்(34) என்பவருக்கும் இடையே கோவில் கொடையில் பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 16.05.2016 அன்று வினோத் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து ரவிச்சந்திரன் என்ற நல்லதம்பியை கொலை செய்துள்ளனர். இது குறித்து வீரவநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 06-02-2024-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் எதிரி வினோத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வீரவநல்லூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.