நெல்லையில் புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு..

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி விலங்கியல் துறை மற்றும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் புற்று நோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கு 10.02.2025 அன்று கல்லூரி உரையரங்கில் நடைபெற்றது. முதுகலை விலங்கியல் துறை தலைவர் முனைவர் எம்.ஐ. டிலைட்டா மனோ ஜாய்ஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.எம். அப்துல் காதர் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ சையது முகமது காஜா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் வி. சிவகுமார் நிகழ்வின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார். முனைவர் ஜே.சீபா வான்மதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம்-கேரளா பேலியம் இந்தியா அமைப்பின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சித் துறையின் குழுத் தலைவர் மருத்துவர். S. ஹஸ்மத் பர்ஹானா கலந்து புற்று நோய்க்கான பேலியேடிவ் கேர் என்ற தலைப்பில் உரையாற்றினார். புற்று நோய் மற்றும் பல்வேறு நோய்களின் தாக்கம் காரணமாக அவதிப்படும் பாதிப்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய சேவைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது. மேலும், மாணவர்கள் தன்னார்வலர்களாக செயல்பட முன் வர வேண்டும் என உரையில் குறிப்பிட்டார்.

 

முன்னதாக உலக புற்று நோய் தின விழிப்புணர்வின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு கருத்தோவிய போட்டி, உணவு தயாரித்தல் போட்டி மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டியும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில், முனைவர் பி.எஸ். பென்சி நன்றியுரை வழங்கினார்.

 

கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, துறைத் தலைவர், இணைப் பேராசிரியர், முனைவர். எம். சித்தி ஜமீலா மாணவர்கள் இடையே மனித நேய சேவையின் முக்கியத்துவத்தை விளக்கினார். கல்லூரியின் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் முகமது ஹனீப், துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் முகமது ரோசன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழா ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!