நெல்லை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது.

மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். எனவே பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஒடைகளில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றில் இறக்கிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!