மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக்கொள்ளலாம்; நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல்..

நெல்லையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (UDID) புதிதாக பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 17-12-2023, 18-12-2023 ஆகிய நாட்கள் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தொலைந்து இருந்தாலும், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் புதிதாக மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

29-12-2023 வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமான தேசிய அடையாள அட்டை (UDID) பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளி நபர்கள் பயன்படுத்தும் உதவி உபகரணங்கள் பழுதாகி இருந்தால் உரிய நிறுவனங்கள் மூலம் பழுது நீக்கம் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாற்றுத்திறனாளி நபர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் கா.பா. கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார். கூடுதல் விபரங்களுக்கு 9443174693 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!