தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலர்; நெல்லை காவல் ஆணையர் பாராட்டு..
தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் காவலரை நேரில் அழைத்து நெல்லை காவல் ஆணையர் பாராட்டினார். தேசிய அளவில் 44 வது மாநில மூத்தோர் தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13-02-2024 முதல் 17-02-2024 வரை நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் முதல் நிலை காவலர் 1515 ரேணுகாதேவி கலந்து கொண்டு 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தையும், 1500 மீட்டர் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார்.
மேலும் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக வரும் ஜூலை மாதம் ஸ்வீடன் நாட்டில், சர்வதேச அளவில் நடக்க விருக்கும் தடகள போட்டிக்கு தேர்ச்சி பெற்ற காவலர் ரேணுகாதேவி அவர்களை நெல்லை மாநகர காவல் ஆணையர் பா.மூர்த்தி 24-02-2024 ஆம் தேதி நேரில் அழைத்து தனது பாராட்டுக்களையும், மேலும் சர்வதேச அளவில் பதக்கம் வென்று வர தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள் சுனை முருகன் மற்றும் பால்தாய் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









