நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பீடித் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை 800 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டெல்லியில் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன் ஷுக் மாண்டவியாவை 16.10.2024 அன்று நேரில் சந்தித்து எம்.பி. ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்ற பாளையங்கோட்டை, மேலப்பாளையம், கூடங்குளம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம் முக்கூடல் ஆகிய பகுதிகளை சேர்ந்த பல லட்சக்கணக்கான பீடி சுற்றும் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு ரூ.800 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இத்தொகையானது பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த விதத்திலும் உபயோகமாக இல்லை.
எனவே இது விஷயத்தில் தனிக்கவனம் செலுத்துவதோடு பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை 800 ரூபாயில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என ராபர்ட் புரூஸ் எம்.பி. குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் மன்ஷுக் மாண்டவியா, விரைவில் பரிசீலித்து துரித நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.