மணிமுத்தாறு வன பகுதியில் விதைப் பந்து வீசும் பணி…

மணிமுத்தாறு மலை அடிவார பகுதியில் பசுமையை பாதுகாக்கும் விதமாக 9-வது போலீஸ் பட்டாலியன் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து 50,000 விதைப் பந்துகள் விதைக்கும் பசுமை பணி நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1200 மாணவிகள் தயாரித்த ஒரு லட்சம் விதைப் பந்துகளில் பாதியான 50,000 பந்துகளை மாணவிகள், மணிமுத்தாறு மலைப்பகுதி வனத்திற்கு நேரடியாக சென்று அர்ப்பணித்தனர்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் இந்த பசுமை நிகழ்விற்கு மணிமுத்தாறு 9-வது போலீஸ் பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். உதவித் தளவாய் தீபா, துணைத் தளவாய் ஸ்ரீதேவி மாணவிகளை மலை அடிவாரத்தில் விதைப் பந்துகள் எறிய வழி நடத்தினர். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் முன்னெடுத்து வரும் ஒரு கோடி விதைப் பந்துகள் தயாரிக்கும் பசுமை பயணத்தில் பங்கேற்ற மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பட்டாலியன் காவலர்களுக்கு சுந்தர பாண்டியபுரம் கோமதி நாயகம், ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன் ஆகியோர் நற் சான்றிதழ்களை வழங்கினர். பட்டாலியன் மைமூன் யாவரையும் வரவேற்றார்.

காவல்துறை அலுவலர்கள் ராம கிருஷ்ணன், பூத பாண்டியன், கண்ணன் ஏற்பாடுகளை கவனித்தனர். மரியா கல்லூரி செயலர் லாரன்ஸ், முதல்வர் சுஷ்மா, மேனேஜர் ரமேஷ் பட்டாலியனில் கௌரவிக்கப்பட்டனர். பட்டாலியன் தளவாய் கார்த்திகேயன் மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பு மற்றும் காவல் துறையில் பெண்கள் அதிக அளவில் சேர விழிப்புணர்வு வழங்கினார். ஒரு விதைப் பந்தில் 5 விதைகள் என இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் விதைகள் மாணவிகளால் மணிமுத்தாறு மலை அடிவார பகுதியில் வீசப்பட்டது. விதை பந்துகளை வீசிட காவல் துறையினர் பெரிய அளவில் மாணவிகளுக்கு உதவினர்.

 

இந்தப் பயணம் மற்றும் சேவை வித்தியாசமான அனுபவமாக இருந்தது என மரியா கல்லூரி பேராசிரியர்கள் மணி மேகலை, சிவதாரணி, ஸ்டெல்லா மேரி மற்றும் பலர் தெரிவித்தனர். இதுவரை 46 லட்சம் விதைப் பந்துகளை எட்டி முடித்திருப்பதாக சமூக நல ஆர்வலர் திருமாறன் தெரிவித்தார். போலீஸ் பட்டாலியன் செல்வ சாய், கீதா, சுபா, லாவண்யா, மாரியம்மாள், ராஜேஸ்வரி, விஜிலா, இந்துஜா, ரேவதி, கௌசல்யா, சகாய ஸ்டெபி ஆகியோர் பசுமை பணியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லிடைக் குறிச்சி எழுத்தாளர் ராஜ் நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!