நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெறுவதை தவிர்த்து துணை வேந்தரிடம் மாணவி பட்டம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெறும் 650-க்கும் மேற்பட்டோர் பட்டமளிப்பு விழா அரங்கில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்நிலையில் ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்து துணை வேந்தரிடம் தனது பட்டத்தை பெற்றுக் கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் மாணவி ஜீன்ஜோசப் கூறுகையில், தமிழ் நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தச் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
You must be logged in to post a comment.