முதல்வருக்கு நன்றி பாராட்டு சிறப்பு மலர்..

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நன்றி பாராட்டு சிறப்பு மலரினை தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியனிடம் பொதிகை தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா வழங்கினார். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனை நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா, செயற்குழு உறுப்பினர் பா.இராமகிருஷ்ணன் ஆகியோர் அரசு விருந்தினர் மாளிகையில் 05.07.2025 அன்று சந்தித்தனர்.

 

அப்போது, பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக தயாரிக்கப்பட்ட கலைஞர் பெயரில் புதிய பல்கலைக் கழகம் அறிவித்த முதல்வருக்கு நன்றி பாராட்டு சிறப்பு மலரை அமைச்சரிடம் வழங்கினர். தொடர்ந்து, பல்கலைக் கழகம் தொடங்க சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல வேண்டும் என அமைச்சரைக் கேட்டுக் கொண்டனர். அப்போது, இந்த கோரிக்கையின் மீது முதல்வர் தக்க நடவடிக்கையை உறுதியாக எடுப்பார் என அமைச்சர் தெரிவித்தார்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!