தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்படும் என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மரக்கன்றுகள் நடும் விழாவின் போது உறுதியளித்துள்ளார்.தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தை பசுமை நிறைந்த பகுதியாக மாற்றிடும் பணிகளை மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு இணைந்து முன்னெடுத்து வருகிறது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் மருத்துவமனையை இயற்கை எழில் நிறைந்த பகுதியாக மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வருடந்தோறும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அந்த வகையில் எக்ஸ்னோரா சுற்றுச் சூழல் அமைப்பினர் 400 மரக்கன்றுகள் மற்றும் அலங்கார தொட்டிகளுடன் கூடிய அழகு செடிகளை மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர். எக்ஸ்னோரா சுற்றுச் சூழல் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 400 மரக்கன்றுகள் மற்றும் அழகு செடிகள் மருத்துவமனையின் வளாகத்தில் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் முன்னிலை வகித்தார். உறைவிட மருத்துவர் S.S. ராஜேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பேசிய கண்காணிப்பாளர் ஜெஸ்லின், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையினை இயற்கையின் உறைவிடமாகவும், பசுமை நிறைந்த பகுதியாக மாற்றுவதாகவும் உறுதியளித்தார்.
விழாவில் மூத்த மருத்துவர் லதா, மருத்துவர் கீதா, செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா,திருப்பதி, வசந்தி மற்றும் செவிலியர்கள், நுண்கதிர் வீச்சாளர் முருகன் மற்றும் மருத்துவமனையின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் எக்ஸ்னோரா எனும் சுற்றுசூழல் பேணும் அமைப்பின் மாவட்ட தலைவர் DR.விஜயலக்ஷ்மி, சக்தி எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் DR.கயற்கண்ணி, சிட்டி எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் சீனிவாசன், துணை தலைவர் ராசி சுரேஷ், பொருளாளர் வேலு, செயலாளர்கள் சங்கரநாராயணன், துரை மீனாட்சிநாதன், பழனிராஜ் மற்றும் ஈ.ஷா.துரை இவர்களுடன் சிறப்பு விருந்தினராக VTSR சில்க்ஸ் ரஹ்மான் கான் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் VTSR சில்க்ஸ் உரிமையாளர் முஹம்மது இஸ்மாயில் ஏற்பாட்டில் தலைமை மருத்துவமனையின் இரத்த வங்கி முழுமையாக அழகிய வண்ணம் பூசப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது. மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், மருத்துவமனைக்கு அழகிய வண்ணம் பூசியதுடன் மறு சீரமைக்க உதவியவர்களுக்கும், தேவையான உதவிகள் பலவற்றை செய்து வரும் அனைவருக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.