முதியோர்களை சுற்றுலா அழைத்து சென்று மகிழ்வித்த பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள்..

பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் முதியோர்களை மகிழ்விக்கும் பொருட்டு கோடை கால சுற்றுலா அழைத்து சென்றனர். தென்காசி பகுதியில் சாலையோரம் ஆதரவின்றி சுற்றித் திரிந்த நபர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு கொடுக்கும் உன்னதமான பணிகளை பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள 30 நபர்களை பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள் கோடை கால சுற்றுலா அழைத்துச் சென்றனர். அப்போது வல்லம் பட்டாணி அருவியில் முதியோர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க குளித்து அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வல்லம் நேஷனல் பள்ளி தாளாளர் அப்துல் சலாம் செய்திருந்தார். வாகன வசதிகளை TAJMAHAL TAXI அலியார் இலவசமாக செய்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் இக்பால் மற்றும் BYUP சபீக் முகம்மது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதியோர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆதரவின்றி, உறவுகளின்றி இருந்த முதியோர்களுக்கு இந்த சுற்றுலா மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது. சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களுக்கு அனைத்து முதியவர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!