தென்காசியில் மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி..

தென்காசி தலைமை மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணி நடந்தது. மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மரு. இரா.ஜெஸ்லின் துவக்கி வைத்தார். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் 13-வது வார்டு தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டது. இதில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தலைமையில் முதல் மூலிகைச்செடி நட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உறைவிட மருத்துவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் தென்காசி 13 வார்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், கரிசல் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பாபு வேலன், தென்காசி அரசு மருத்துவமனை QPMS பணியாளர்கள் கலந்து கொண்டனர். மூலிகை தோட்டம் அமைக்கும் பணி “பசுமை தென்காசி” முஸ்தபா, பசுமை இலத்தூர் அமைப்பைச் சேர்ந்த கனகராஜ், உதயக்குமார்,கவியரசு, சதீஸ்குமார் ஆகியோர் உதவியுடன் நடந்தது. இறுதியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!