மாற்றுத்திறனாளி கோரிக்கையின் மீது தென்காசி மாவட்ட எஸ்.பி உடனடி நடவடிக்கை..

குற்றாலம் பேரருவி பகுதியில் வழியின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு தடுப்பு மாற்றுத்திறனாளி ஒருவரின் கோரிக்கையை ஏற்று அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை சரிசெய்யும் வகையில் காவல் துறையால் பேரிகார்டு தடுப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழியில் குற்றாலம் காவல் துறையின் சார்பில் பேரிகார்டு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து குறைந்து கூட்டமின்றி அருவி காணப்படுவதால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் அருவிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பேரருவிக்கு செல்லும் வழியின் குறுக்கே பேரிகார்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில் பேரிகார்டு தடுப்பை அகற்ற உத்தரவிடுமாறு மாற்றுத்திறனாளி அபுபக்கர்சித்திக் என்பவர் தென்காசி மாவட்ட எஸ்.பி க்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று பேரருவிக்கு செல்லும் வழியின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு தடுப்பு காவல்துறையால் அகற்றப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தள்ளி வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளியின் கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பேரிகார்டு தடுப்பை அகற்ற உத்தரவிட்ட தென்காசி மாவட்ட எஸ்.பி கிருஷ்ணராஜ் IPS மற்றும் உத்தரவை செயல்படுத்திய குற்றாலம், தென்காசி மாவட்ட காவல் துறையினருக்கு மாற்றுத்திறனாளி அபுபக்கர்சித்திக் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்யும் பொருட்டு பேரிகார்டு காவல்துறையால் அமைக்கப்படுகிறது. அப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் வாகனங்கள் சிரமம் ஏதுமின்றி சென்று வருவதை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார். மேலும் தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!