தென்காசி மாவட்டத்தில் ஊர்காவல்படை வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்..

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி (Area Commander) மற்றும் துணை வட்டார தளபதி (Deputy Area Commander ) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கவுரவப்பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம். வட்டார தளபதி பதவி துணை வட்டார தளபதி பதவி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை சுயவிபரக் குறிப்புடன் காவல் கண்காணிப்பாளர், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு 20.05.2022-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.கிருஷ்ணராஜ், இ.கா.ப தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 9385678039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!