மரத்தை உரசி செல்லும் உயர் அழுத்த மின்கம்பி; மின் பாதையை சரி செய்திட கலெக்டருக்கு கோரிக்கை..

தென்காசி மாவட்டம் குறிச்சான்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ஆபத்தை உருவாக்கும் வகையில் மரத்தை உரசி செல்லும் உயர் அழுத்த மின் பாதையை சரி செய்ய ஆலங்குளம் மதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆலங்குளம் மதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மருதச்சாமி பாண்டியன் தெரிவித்துள்ளதாவது: தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் இருந்து கீழக்கலங்கல் செல்லும் சாலையில் குறிச்சான்பட்டி கிராமத்தின் பஸ் ஸ்டாப் அருகில் சாலையின் ஓரத்தில் பெரிய ஒரு ஆலமரம் உள்ளது. அந்த மரத்தின் வழியாக சுமார் 32000 கேவிஏ உயர்மின் அழுத்த மின் கம்பி இணைப்பு செல்கிறது. மரம் அதிகமாக வளர்ந்து மேலே மரத்தை மின்கம்பி உரசிய படி மின்கம்பி செல்வது அபாயகரமாக உள்ளது. அதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் மின்பாதையை சரி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!