நெல்லையில் “கலைஞர் தமிழ்” பன்னாட்டு கருத்தரங்கம்;கவிஞர் பேரா அறிவிப்பு..

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி ஜூலை 3-ல் “கலைஞர் தமிழ்” என்ற பொருண்மையில் பன்னாட்டு தமிழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக நெல்லை பொதிகை தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பே.இராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது: “மேனாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செம்மொழி வேந்தர் டாக்டர் கலைஞரின் 99-ஆவது பிறந்த நாளான ஜூலை 3- அன்று பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பாக நெல்லையில் கலைஞர் தமிழ் என்ற பொருண்மையில் முழு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்ச் சான்றோர்கள், பேராசிரியர்கள்,ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம். கலைஞரும் திருக்குறளும், கலைஞரும் சங்கத்தமிழும், கலைஞரும் தொல்காப்பியமும், கலைஞரும் திரைத் தமிழும், கலைஞரும் இதழியல் தமிழும் போன்ற தலைப்புகளில் 5-பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளை தமிழில் பிழையின்றித் தட்டச்சு செய்து யூனிகோட் அல்லது பாமினி எழுத்துருவில் (வேர்ட் (WORD) டாக்குமெண்டாக மட்டும்) [email protected] என்ற இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் 20.05.2022-க்குள் வந்து சேர வேண்டும். நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ISBN எண்ணுடன் ஆய்வுக் கோவையாக வெளியிடப்படும். கருத்தரங்கின் போது ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை அமர்வுகளில் கலந்து கொண்டு வாசிக்க வேண்டும். கருத்தரங்க நிறைவில் சிறப்பு விருந்தினர்களால் கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்படும். இவ்வாறு பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரும்,தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான கவிஞர் பே.இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!