நெல்லையில் உலகப் பாரம்பரிய தினம்; தமிழ் மக்களின் பாரம்பரியம் குறித்து அருங்காட்சியகத்தில் விழிப்புணர்வு..

நெல்லையில் உலகப் பாரம்பரிய தினத்தை முன்னிட்டு பழந்தமிழ் மக்களின் பாரம்பரியம் குறித்து சிறப்புரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலகம் முழுவதும் தொல்லியல், பாரம்பரியம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் 18 உலகப் பாரம்பரிய தினமாக கடைபிடிக்கப்படுகிறது.இந்திய திருநாட்டில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அடிப்படையாக கொண்டு பல தரப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அனைவருக்கும் தனித்தனியாக பண்பாடு மற்றும் கலாச்சாரம், வரலாறுகள்,வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றிற்கு உதாரணமாக பழங்கால தமிழர்களின் கட்டிடக்கலை, ஓவியக்கலை, நாகரீகம், பாரம்பரியத்தை பறை சாற்றும் சான்றுகளாக வழிபாட்டு தலங்களில் ஒன்றான கோயில்கள் திகழ்கின்றன. இளைய தலைமுறையினர் வரலாற்றை அறிந்து கொள்ளவும், பாரம்பரியச் சின்னங்கள் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கிடவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 18 இல் உலகப் பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் சார்ந்த விழிப்புணர்வுக்காக ஏப்ரல் 18 தினத்தை உலகப் பாரம்பரிய தினமாக கொண்டாடுகிறது. 2022க்கான இத்தினத்தின் முழக்கமாக “பாரம்பரியமும் காலநிலையும்” என்பது உருவாக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் இத்தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு சொற்பொழிவு நடத்தப்பட்டது. நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தார். சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர். ஜே.ஸ்டெல்லா பழந்தமிழ் மக்களின் மொழி,பாரம்பரியம், பண்பாடு,நாகரீகம் குறித்து சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் பழந்தமிழரின் கட்டிடக்கலை, சிற்பக்கலை பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இச்சொற்பொழிவில் துய யோவான் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!