தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்..

தென்காசி மாவட்டத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.04.2022 திங்கள் கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதி பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உதவித் தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 385 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்கள் என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரார்களுக்கு பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.முத்து மாதவன், உதவி ஆணையர்,(கலால்).ராஜ மனோகரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள்) பிரான்சிஸ், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!