பணத்துடன் சாலையில் கிடந்த மணிபர்ஸ்; உரியவரிடம் ஒப்படைத்த மாணவருக்கு பொதுமக்கள் பாராட்டு..

சாலையில் கிடந்த மணி பர்ஸை உரிய நபரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரன்கோவிலில் இருந்து திருவேங்கடம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஓர் தனியார் பள்ளி அருகே மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது. அவ்வழியாக வந்த சங்கரன்கோவில் புதுமனை இரண்டாம் தெருவைச் சேர்ந்த காஜாமொய்தீன் என்பவரின் மகன் அப்துல் மஜீத் என்ற மாணவன் கண்டெடுத்து மணி பர்ஸை பார்த்ததில் ரூபாய் 5,500 பணம் இருந்தது. அதை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்களிடம் அந்த மாணவன் ஒப்படைத்தார். பின்பு விசாரணை செய்ததில் மணி பர்ஸை தவற விட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.பின்னர் ரஞ்சித்தை காவல் நிலையம் வரவழைத்து அவருக்கு காவல் ஆய்வாளர் பால் ஏசுதாசன் அவர்கள் முன்னிலையில் தகுந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மணி பர்ஸை ஒப்படைத்தனர். மாணவன் அப்துல் மஜீத்தின் இச்செயலை காவல் துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!