நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகையா?; புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு..

நெல் அறுவடை இயந்திரங்கள் நிர்ணயித்த வாடகை அளவை விட கூடுதலாக வசூலித்தால் தென்காசி மாவட்ட விவசாயிகள் வேளாண் உதவி செயற் பொறியாளருக்கு 9629128915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தென்காசி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் பெல்ட்டைப் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூ. 2200/-ம், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1600/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வாடகை பெற தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், நிர்ணயிக்கப்பட்டதொகையைவிட கூடுதல் வாடகை பெறக்கூடாது என தெரிவித்துக் கொள்வதுடன் அவ்வாறு கூடுதல் வாடகை பெறப்படும் பட்சத்தில் வேளாண்மைதுறை, வேளாண்மைபொறியியல் துறை அலுவலர்களிடமோ அல்லது வேளாண் உதவி செயற் பொறியாளரின் தொலைபேசி எண்ணான 9629128915 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!