விளம்பரம் மூலம் பணம் மோசடி; தென்காசி சைபர் கிரைம் உதவியுடன் மீட்பு..

இரட்டிப்பு பணம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் இன்ஸ்டாகிராமில் வந்துள்ள இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்து இனம் தெரியாத நபரிடம் மெசேஜ் செய்துள்ளார். அப்போது வாலிபரிடம் நீங்கள் ரூ 5,000 பணம் அனுப்பினால் 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் உங்களுக்கு ரூ 50,000 பணம் கிடைக்கும் என ஆசை காண்பித்துள்ளார். இதை நம்பிய வாலிபர் எதைப்பற்றியும் சிந்திக்காமல் ரூ 5,000 பணத்தை Gpay ல் அனுப்பி உள்ளார். பின்னர் மோசடி நபர் மீண்டும் மெசேஜ் செய்து நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் நீங்கள் தற்போது ரூ 75,000 வெற்றி பெற்றதாக கூறி பணத்தைப் பெற நீங்கள் ரூ 9,750 செலுத்த வேண்டும் எனக்கூறி மொத்தம் ரூ 14,750 பணத்தை மோசடி செய்துள்ளார்.இது குறித்து அந்த வாலிபர் தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 04.02.2022 அன்று கொடுத்த புகாரின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அவர்கள் அறிவுறுத்தலின் படி காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கை உடனடியாக ஃப்ரீஸ் செய்து பின்பு விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட ரூ 14,750 பணம் மீட்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் வாலிபருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி ஒப்படைக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!