அதிமுகவின் ஊழலை மறைக்க திமுக அரசை குறை கூறி வருகின்றனர்;முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு..

அதிமுகவின் ஊழல் குற்றச் சாட்டுகளை மறைப்பதற்கு சிறப்பாக செயல்பட்டு வரும் திமுக அரசை குறை கூறி வருவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் (EX.MLA) பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சாதனையும் செய்யாமல் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கு சிறப்பாக செயல்பட்டு வரும் திமுக அரசை குறை கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தொழிற்சாலைகளை நிறுவுவதிலும் திமுக அரசு தொடர்ந்து தமிழகத்தை முதல் மாநிலமாக உருவாக்குவதற்கு மிகச் சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்பதை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா ஆட்சி பல்வேறு சட்டங்களை திணிக்கப்பட்டு வர சமூகத்தினரிடையே கலாச்சார தனித்தன்மை சட்டங்களை எல்லாம் மாற்றக் கூடிய முயற்சிகளை கொண்டு வருகின்றனர். அதற்கு உதாரணமாக பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்திய அறிவிப்பு கடும் கண்டனத்துக்குரியது என்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்கு விவசாயிகள் மீது கொண்டு வரப்பட்ட சட்டங்கள் ஒரு ஆண்டுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டது என்றும்,இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது பெருமைப்படக்கூடிய அளவிற்கு இல்லை. மத்தியிலே ஒரு மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய காங்கிரசும் திமுகவும் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது மாநில தலைமை கழக பேச்சாளர் முகமது அலி, மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துல்காதர், ஆலங்குளம் தொகுதி அமைப்பாளர் எகியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!