குற்றாலம் அருவிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் வருகின்ற 20.12.2021 திங்கள்கிழமை அன்று பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர்ராஜ் அவர்களால் 18.12.2021 சனிக்கிழமை குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவி பகுதிகளில் நேரடியாக தல ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி அருவிப்பகுதிகளில் இயற்கை சீற்றத்தின் காரணமாக உருவான கடும் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்திட அறிவுறுத்தியபடி ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. மேற்காண் நிறைவு பெற்றுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், தென்காசி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன், உதவி பொறியாளர் எம்.எம்.முகைதீன் மற்றும் சுகாதார அலுவலர் இரா.இராஜகணபதி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!