சிறப்பாக செயல்படும் தென்காசி மாவட்ட காவல்துறை;காவல் துறை துணைத் தலைவர் வாழ்த்து..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு IPS ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்து தெரிவித்தார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகம்(DPO), தனிப் பிரிவு அலுவலகம் (Special Branch), மாவட்ட குற்ற ஆவண காப்பகம்(DCRB), நிலம் அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு(ALGSC), மாவட்ட குற்றப்பிரிவு(DCB), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு(IUCAW), தொழில்நுட்ப பிரிவு (Technical Cell), சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJ & HR), மாவட்ட கட்டுப்பாட்டு அறை (Control Room),மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம் (100 – Calls), சமூக ஊடகப் பிரிவு (Social Media Cell), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மையம் (SP Grievance), நெடுஞ்சாலை ரோந்து பிரிவு(Highway Patrol), சைபர் கிரைம் காவல் நிலையம், ஆயுதப்படை போன்ற அனைத்து பிரிவுகளிலும் 17.12.2021 வெள்ளிக் கிழமை திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபிநபு IPS ஆய்வு மேற்கொண்டார். பின்னர் புதிதாக துவங்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உடனிருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!