முப்படை தலைமை தளபதி மறைவு; நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இரங்கல் நிகழ்ச்சி..

இந்திய தேசத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் இராவத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் தலைமை தளபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த், முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் டேவிட், கவிஞர் பேரா, திமுக மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அனிதா, சகாயராணி, தொழிலதிபர் வழக்கறிஞர் முருகப்பன், டாக்டர் கலைஞர் தமிழ் பேரவை மாநில இணைச் செயலாளர் சி.பழனிவேல், பாண்டியன், லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் ஜீவா, அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் காபிரியேல் தேவா மற்றும் கடலூர் மாவட்ட கல்லூரி கபடி அணி வீரர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!