24 மணி நேர அவசர உதவி கட்டுப்பாட்டு அறை;தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் 24 மணி நேர அவசர உதவி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடனாநதி, கருப்பாநதி, ராமநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்கள் நீர்நிலைகள், அணைகள், ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வேடிக்கை பார்க்க வேண்டாம் என்றும், கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகள் தொடர்பான உதவிகளுக்கு 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633 290548 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!