சிவந்தி ஆதித்தனார் பெயரில் தென்காசி புதிய பேருந்து நிலையம்; இந்திய நாடார்கள் பேரமைப்பு வலியுறுத்தல்..

தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் என இந்திய நாடார்கள் பேரமைப்பின் துணைத்தலைவர் லூர்து நாடார் வலியுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நடுநிலைப்பள்ளியில் தமிழர் தந்தை சிபா ஆதித்தனார் 117-வது பிறந்த தினவிழா மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாள் விழா ஆகிய இருபெரும் விழாக்கள் நடைபெற்றன. இந்த விழாவில் இந்திய நாடார் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை வகித்து சி பா ஆதித்தனார், டாக்டர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அதில் அவர் கூறியதாவது, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய, தமிழுக்காக பெரும் பங்கினை வகித்தவர் சி பா ஆதித்தனார் எனவும், தென்காசி ராஜகோபுரத்தை கட்டிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரை தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந் நிகழ்ச்சியில் சாம்பவர் வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்திய நாடார்கள் பேரமைப்பின் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன், மற்றும் சாம்பவர்வடகரை மாரியப்பன், குற்றாலமாடன், மணிவண்ணன், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!