தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினர் தீவிர சோதனை; தென்காசி எஸ்.பி அதிரடி..

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தொடர்ந்து காவல் துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) பணியில் ஈடுபட்டு சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கியுள்ளனரா என்றும்,மேலும் குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Storming Operation) மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்திலுள்ள 78 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டும்,வாகன சோதனையில் 857 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (107,110 CrPC) 54 குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 89 குற்றவாளிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டுள்ளது. மேலும் வங்கிகள்,நிதி நிறுவனங்கள்,ATM, நகைகடைகள் ஆகிய 573 இடங்களின் ரோந்து சென்று சோதனை செய்தனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிறப்பாக ரோந்து பணி மேற்கொண்ட காவல் துறையினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!