பாரதியின் திருமண நாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும்; நம்பிக்கை தெரிவித்த தென்காசி எம்எல்ஏ.

சுரண்டை காங்கிரஸ் அலுவலகத்தில்  பாரதியார் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் பாரதியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் பேசுகையில், பாரதியார் செல்லம்மாள் திருமண நாள் அரசு விழாவாக அறிவிக்கப்படும்.தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்தார். தென்காசி எம்எல்ஏ தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாரதியார் நினைவு தின விழா நடந்தது. விழாவிற்கு சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால் தலைமை வகித்தார். விழாவில் தென்காசி எம்எல்ஏவும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ். பழனி நாடார் அலங்கரிப்பட்ட பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய எம்எல்ஏ தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறார்.‌ பாட்டு கவிஞர் பாரதியார் செல்லம்மாள் திருமண நாளை அரசு விழாவாக அறிவித்து செல்லம்மாள் வீடு அமைந்துள்ள கடையத்தில் அதனை கொண்டாட வேண்டும். கடையத்தில் பாரதியார் சிலை அமைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அமைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பாரதியார் சிலையை கடையத்தில் விரைவில் அமைக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன். முதல்வர் அதனை ஏற்பாடு செய்வார் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா பழனி நாடார், பால் (எ) சண்முகவேல், மேலநீலீதநல்லூர் வட்டார தலைவர் முருகையா, சமுத்திரம், ஊடக பிரிவு சிங்கராஜ், இளைஞர் காங்கிரஸ் அமுதா சந்திரன், தபேந்திரன், சிறுபான்மை காங்கிரஸ் சாலமோன், கந்தையா மகளிர் காங்கிரஸ் சேர்மகனி, தேவி, சமுத்திர பாண்டி, டுவின்ஸ் கோபால், தாயார் தோப்பு ராமர், கேடிஆர் மகாராஜா, பிரபாகரன், தெய்வேந்திரன், செல்வம், அரவிந்த், ஆட்டோ செல்வராஜ், கோயில் பிச்சை, மகேந்திரன், அருணாசலம், விஜயன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!