பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…

தென்காசி மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் சார்பில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்ப வார இதழ் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ஸ்ரீ ஆகியோர் தலைமையேற்றனர். நமது எம்ஜிஆர் மூத்த பத்திரிக்கையாளர் மாரியப்பன், சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கம் மாநில பொதுசெயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் சமூக விரோதிகளால் சில அரசு ஊழியர்கள் மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது. இதில் பத்திரிகைத்துறை நண்பர்கள் மக்கள் சாணக்கியா மாவட்ட நிருபர் மூத்த பத்திரிகையாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன், மக்கள் சாணக்கியா, ஆரம்பம் வார இதழ் தென்காசி மாவட்ட நிருபர் மூத்த பத்திரிகையாளர் சிவராம கிருஷ்ணன்,ஆரம்பம் வார இதழ் தென்காசி மாவட்ட நிருபர் ஆனந்தகுமார், பாரத இதழ் குருவிகுளம் தாலுகா நிருபர் மாரிமுத்து, பாரத இதழ் திருவேங்கடம் தாலுகா நிருபர், சித்திரைப்பாண்டியன் ரோட் சைடு நியூஸ், தேசிய மக்களாட்சி மாத இதழ் சங்கரன்கோவில் தாலுகா நிருபர் மகேஷ், ரோட் சைடு நியூஸ், தேசிய மக்களாட்சி தென்காசி மாவட்ட நிருபர் தின ஜெயம், கோவிந்தராஜ், சத்தியமித்ரன் தென்காசி மாவட்ட நிருபர் திருமுருகன், விசில் செய்திகள் நிருபர் வீரமணி, திருமலைக்குமார் மணிமாறன் ஜெயக்குமார் மாரியப்பன், செல்வராஜ், சிவசுப்பிரமணியன், வெண்ணி முத்து, ஆயிரம், சண்முக பாண்டி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!